கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இத்தொற்றின் பாதிப்பானது அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் சிறுநீரக செயலிழப்பால் 50 வயதான ஹுச்சப்பா கோனி என்பவர் உயிரிழந்துள்ளார். பின்னர் அவருக்கு கரோனா வைரஸ் சோதனை செய்ததில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தெரியவந்தது.
ஆனால் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று தெரிந்தும் அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்ய மறுத்துவிட்டனர். அதன் பின்னர் இது குறித்து அறிந்த கிராம நிர்வாக அலுவலர், கிராம பஞ்சாயத்துத் தலைவர், சுகாதாரத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு உடை அணிந்து அவரது உடலை தகனம் செய்தனர்.