ETV Bharat / bharat

அரசுப் பேருந்தில் சிக்கிய அரை கோடி!

அமராவதி: அரசுப் பேருந்தில் சிக்கிய ரூ.45 லட்சம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

APSRTC huge cash recovered Kanchikacherla Police அரசுப் பேருந்தில் சிக்கிய அரை கோடி! ஆந்திர அரசுப் பேருந்தில் ரூ.45 லட்சம் பறிமுதல், பணம் பறிமுதல், ஆந்திரா Passenger travelling in APSRTC bus held with over Rs 45 lakh cash

author img

By

Published : Mar 13, 2020, 2:35 PM IST

ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான அரசுப் பேருந்து ஒன்று கிருஷ்ணா மாவட்டத்தின் காஞ்கீச்சரா சுங்க சோதனை சாவடி அருகே சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை மடக்கி மாநில காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது பேருந்துக்குள் இருந்த சூட்கேஸ் ஒன்றில் கத்தை கத்தையாக ரூ.45 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவலர்கள் அங்கிருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.

ஒரு பயணி முன்னுக்கு பின் முரணான தகவல் கொடுத்தார். இதையடுத்து அவரிடம் காவலர்கள் துருவி துருவி விசாரணை நடத்திவருகின்றனர்.

இது குறித்து காவலர்கள் தரப்பில் கூறுகையில், “பறிமுதல் செய்யப்பட்ட பணம் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரிடம் விசாரணை நடந்துவருகிறது. விசாரணையின் முடிவில் மேற்கொண்டு தகவல்கள் தெரியவரும்” என்றார்.

எனினும் விசாரணைக்குள்ளான நபர் குறித்த தகவல்களை காவலர்கள் வெளியிடவில்லை.

இதையும் படிங்க: கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் கடத்தல் - 2 வெளிநாட்டவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.