கோவிட்-19 பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள், தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பு ஆகிய நடவடிக்கைகளுடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று (செப்.14) காலை 9 மணிக்கு தேசிய கீதம் பாடப்பட்டு தொடங்கின.
இதையடுத்து 9.05 மணிக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து இரு அவைகளும் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வளாகத்திற்குள் நுழைவோர் அனைவரும் அமர்வு தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
தொற்றுநோய்கள் (திருத்தம்) மசோதா மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை (செப்.14) நடக்கிறது. அப்போது, கோவிட்-19 பாதிப்புகள் குறித்து விவாதம் நடத்தப்படலாம்.
கேள்வி நேரத்தை நீக்குதல் மற்றும் பூஜ்ய நேரத்தை குறைக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த நாடாளுமன்ற அவைத்தொடரில் கேள்வி நேரம் அளிக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியும் குறைக்கப்பட உள்ளது. முன்னதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி, “சீன ஆக்கிரமிப்பு, கோவிட் தொற்றுநோய் விவகாரத்தில் அரசாங்கத்தின் மேலாண்மை, பொருளாதாரத்தில் சரிவு, வேலை இழப்புகள் மற்றும் வேலையின்மை என நாங்கள் விவாதிக்க விரும்பும் பல முக்கியமான பிரச்சினைகள் உள்ளன” என்றார்.
இதையும் படிங்க: கரோனா பீதி: நாடாளுமன்றம் பளீச்!