ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் அதனை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்த கலந்துரையாடல் (பரிக்ஷா பே சார்ச்சா) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். நாடு முழுவதிலிருந்தும் தேர்வுசெய்யப்பட்ட இரண்டாயிரம் மாணவர்கள் டெல்லியில் உள்ள தல்கோதரா மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அங்கு பேசிய மோடி, "பிரதமராக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். அந்நிகழ்ச்சிகள் பல்வேறுவிதமான அனுபவங்களைத் தந்துள்ளன. ஆனால், மனதுக்கு பிடித்த நிகழ்ச்சி என்னவென்று கேட்டால் நான் இந்நிகழ்ச்சியைத்தான் (பரிக்ஷா பே சார்ச்சா) சொல்வேன்" என்றார்.
மேலும், சந்திரயான் 2 தோல்வி குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, தோல்வியடைந்தாலும்கூட அந்நிகழ்வில் பங்கேற்று அவர்களுக்கு (அறிவியல் அறிஞர்கள்) தோளோடு தோள்நிற்க வேண்டும் என்பதாலேயே சென்றேன் என்றார்.
விண்கலம் ஏவப்படுவதற்கு முன்பாக 'திட்டம் தோல்வியடைந்தால் என்ன செய்வீர்கள்?' என்று தன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்காகவே (தோல்வியில் தோள்கொடுக்க) தான் அங்கு செல்கிறேன் எனக் கூறியிருந்ததையும் மோடி குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: நேரலை: தேர்வு குறித்து மாணவர்களுடன் உரையாடும் மோடி
!