புதுச்சேரியின் பாப்ஸ்கோ அரசு நிறுவனத்தில் சுமார் 1100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 32 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்துவருகிறது. நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, நீண்டகாலமாக அவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் மேலாண் இயக்குநர், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அவர் மட்டும் மாத ஊதியம் எடுத்துக் கொண்டுள்ளார் என்றும், மேலாண் இயக்குநரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதிய பணத்தை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாப்ஸ்கோ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, கோரிக்கை அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:ஸ்விகி ஊதியக் குறைப்பு: காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை!