புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் திருக்கோயிலில், வெஙக்டாஜலபதி பெருமாளுடைய 16அடி உருவ சிலை நிறுவப்படவுள்ளது. இந்த சிலையானது திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வடிவமைக்கப்பட்டு கொண்டு வரப்பட இருக்கிறது. திருப்பதி மூலஸ்தானத்தில் உள்ள திருமாலின் உருவத்தைப் போன்றே அதே அளவில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை பஞ்சவடிக்கு கொண்டுவரப்பட்டு வரும் மே மாதம் 10ஆம் தேதி பிரதிஷ்டை விழா நடைபெறவுள்ளது. மேலும், 23ஆம் தேதி நடைபெற உள்ள மகா சம்ப்ரோக்ஷணத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தினர் சார்பாகக் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.