ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அங்கிருக்கும் கிராமங்களில் தாக்குதல் நடத்தினர்.
காலை 11.30 மணியளவில் ரஜோரி மாவட்ட நவ்ஷேரா எல்லைப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து இந்திய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ”தொடர்ச்சியாக 17ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்துகின்றனர்.
கடைசியாக வந்த தகவலின்படி இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல் நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும்” என்றார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலில் மூன்று சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம்