ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கம் செய்தபின்பு, பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறித் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.
இதனிடையே, ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கஸ்பா, கிர்னி ஆகிய பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை 11 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவ தரப்பிலிருந்தும் பதிலடி தரப்பட்டது.

2003ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரண்டாயிரத்திற்கும் அதிகமான முறை, தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : அறிவுரை தேவையில்லை: ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி