இந்தியாவின் சர்ச்சைக்குரிய எல்லைகளில் ஒன்று, ஜம்மு காஷ்மீர். இதன் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாதுகாப்புப் படையினருக்கும், பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படும்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர், கெர்னி எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் இன்று திடீர் தாக்குதல் நடத்தியது.
இன்று காலை நடைபெற்ற இத்தாக்குதலில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தன் ஆயுதங்களால் சரியான பதிலடியை கொடுத்தது. இதே பகுதியில் பாகிஸ்தான் முன்பும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இயந்திர துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக குண்டுகளையும் வீசியும் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொல்லப்பட்டார். மூன்று பேர் காயமடைந்தனர். ராணுவ நிலைகள், கிராமங்களை குறிவைத்தே அடுத்தடுத்த தாக்குதல்கள் நடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மத நல்லிணக்கத்தை போதிக்கும் காஷ்மீர் சிவன் ஆலயம்