சீக்கியர்களின் முக்கிய புனிதத் தளமாகக் கருதப்படும் கோல்டன் டெம்பிலை வடிவமைத்ததில் முக்கியமானவராக கருதப்படுபவர் மகாராஜா ரஜ்சித் சிங். இவரது நினைவுதினம் ஜூன் 27 முதல் ஜூலை 6 வரை பாகிஸ்தானிலுள்ள கைபர் பக்டூன்க்வா என்ற இடத்தில் வருடா வருடம் அனுசரிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த வருடம் அனுசரிக்கப்படவிருக்கும் மகாராஜா ரஜ்சித் சிங்கின் நினைவு நாளை அனுசரிப்பதற்கு விண்ணப்பத்திருந்த இந்தியாவைச் சேர்ந்த 463 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது.