ETV Bharat / bharat

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு! - பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

ஸ்ரீநகர் : காஷ்மீர் எல்லையில் உள்ள பூஞ்ச் ​​மாவட்டத்தில் இன்று (செப்.05) காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

Pak violates ceasefire in Jammu and Kashmir's Poonch

author img

By

Published : Sep 5, 2020, 6:01 PM IST

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் இன்று காலை 9.15 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். மேலும், மோட்டர் குண்டுகளை வீசியும் அவர்கள் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்தியப் பாதுகாப்பு படையினர், இதற்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புதன்கிழமை (செப்.02) கிரி என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுப்பட்டதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 2,730 முறை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக அப்பாவி மக்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் காயமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஷின்ஷோ அபே காலத்தில் இந்திய - ஜப்பான் உறவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.