ஜம்மு - காஷ்மீர் எல்லையான மச்சில் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்கிஸ்தான் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி இன்று (ஜூன் 18) பிற்பகல் தாக்குதல் நடத்தினர். அதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியா மீது தாக்குதல் நடத்திவருகிறது. ஜூன் 14ஆம் தேதி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: வீரமரணமடைந்த தெலங்கானா வீரருக்கு இறுதிச்சடங்கு!