ஜம்மு - காஷ்மீரில் உள்ள சம்பா மாவட்டத்திற்குள் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் ஊடுருவ முயன்றார். எல்லைப் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த வீரர்கள் அந்தப் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தினர். இரவு நேரத்தின்போது மங்குசக் எல்லைப் பகுதியில் ஊடுருவ பயங்கரவாதி முயன்றதாகவும் அவரை உடனடியாகப் பாதுகாப்புப்படை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவும் முயற்சியில் எத்தனை பேர் ஈடுபட்டார்கள் என்பது குறித்த தகவல் இல்லை என அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதிலிருந்தே, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டுவருவதாகவும் அவர்களுக்கு தக்க பதிலடியை இந்தியப் பாதுகாப்புப்படை கொடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மங்கும் மனித உரிமைகள்.!