ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை 9:45 மணி அளவில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சக் ஃபாகுராவில் அமைந்துள்ள ராணுவ முகாமை நோக்கி சென்றதாகவும் அவரை சுட்டுவீழ்த்தியதாகவும் எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை தரப்பில், "பல முறை எச்சரிக்கை விடுத்தும் சந்தேகத்திற்கு இடமான வகையில் எல்லை பாதுகாப்பு படை அமைத்த வேலிக்கு அருகே சென்ற ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுவீழ்த்தினர். அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த 2020ஆம் ஆண்டு, நவம்பர் 23ஆம் தேதி, ஊடுருவல் மேற்கொண்ட மற்றொரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்டார். சமீபத்தில், அந்தப் பகுதியில், சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.