2020 சீக்கிய வாக்கெடுப்பு என்ற பெயரில் 7.54 எம்.பி. அளவுகொண்ட செல்போன் செயலி ஒன்றை ருமேனியாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். இது இந்தாண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் காலிஸ்தான் பிரிவினைவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.
இந்தச் செயலியை கூகுளின் பிளே ஸ்டோரிலும் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தச் செயலியை பதிவிறக்கும்போது, பதிப்பு 3.001 பயன்பாடு கேமரா, இருப்பிடம், நெட்வொர்க் அணுகல் மற்றும் நெட்வொர்க் இணைப்பு உள்ளிட்டவை கோருகிறது.
முதல் கட்டத்தில் பயன்பாடு 'டீம் 2020'ஐ தேர்ந்தெடுப்பதற்காக அதன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டைத் தேர்வு செய்ய விருப்பத்தை வழங்குகிறது. இரண்டாவது கட்டத்தில், பயன்பாட்டைப் பதிவிறக்கும் மொபைல் பயனரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, நாட்டின் பெயர், வாட்ஸ்அப் எண் மற்றும் பிற விவரங்களை நிரப்ப இது வழிநடத்துகிறது.
இது குறித்து மேலும் சில பார்வையாளர் கருத்து தெரிவிக்கையில், "இது மதத்தின் பெயரில் இந்தியாவில் வெறுப்பை பரப்புவதற்காக சில பாகிஸ்தானியர்கள் தயாரித்த மலிவான பயன்பாடாகும். யாராவது ஆதாரம் விரும்பினால், ஸ்கிரீன் ஷாட்களில் சேவை வழங்குநரின் பெயரைப் பாருங்கள். அதில் பாகிஸ்தானை சேர்ந்தவர்களின் தரவுகள் உள்ளது. இது ஒருவித பயங்கரவாதத்திற்காக பயன்படுத்தப்படுகிறது” என்கின்றனர்.
இதையும் படிங்க: பஞ்சாப் இளைஞர்களை பாகிஸ்தான் சீரழிக்கிறது: காலிஸ்தான் குற்றச்சாட்டு