ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் புதன்கிழமை (மே6) நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கி, அதிகாலை வரை நீடித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோடு பகுதிகளான ரஜோரி மாவட்டத்திலுள்ள மஞ்சகோட்டே பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக துப்பாக்கிக் குண்டுகளால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
இதேபோல். பூஞ்ச் மாவட்டம் பாலக்கோட்டே செக்டார் பகுதியிலும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்தத் தாக்குதலுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கப்பட்டது” என்றார்.
மேலும், “அந்தப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது” எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப்படை வீரர் சந்திரசேகர் வீரமரணம்!