என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ. ஆகியவைக்கு எதிராக இஸ்லாமியக் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நிஜாமாபாத்தில் கண்டனப் பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், 'நாட்டின் தற்போதைய நிலை கவலையளிக்கிறது. எங்களது போராட்டத்தை ஆதரித்து மதச்சார்பற்ற மாநிலமாக இருக்கும் என உறுதியளித்த தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
இந்தப் போராட்டம் கட்சிகளுக்காக அல்ல. நாட்டு மக்களின் நலனுக்காக. மக்களையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களைத் திருப்பி அனுப்புவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இந்த ஜனநாயகத்திற்கு விரோதமான சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் தான் எதிர்க்கிறோம்.
நாட்டில் நடைபெற்றுவரும் போராட்டங்களால் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.-ம் பின்னடைவை சந்தித்துள்ளன. எனது குடியுரிமைப் பற்றி கேள்வி எழுப்புவதற்கும், பரிசோதனை செய்வதற்கும் மோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது. சுயமாக ஒரு பட்டம் கூட பெறமுடியாத மோடி, இந்திய அரசியலமைப்பை நசுக்கிக் கொண்டிருக்கிறார். இந்தச் சட்டத்தால் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் சேர்ந்து இந்திய அரசியலமைப்பை அவமதித்துள்ளனர்' என்றார்.
இதையும் படிங்க: உயிரோடு இருக்கும்வரை சி.ஏ.ஏ.வை அனுமதிக்க மாட்டேன் - மம்தா சூளுரை