குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாராத் பந்த்க்கு ஆதரவளித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 250க்கும் மேற்பட்ட மக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உரிய அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்தியதற்காக இவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக புனே காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பாரத் பந்த்' போராட்டத்தின் ஒரு பகுதியாக பஹுஜன் கிரந்தி மோர்ச்சா அமைப்பின் உறுப்பினர்கள் கஞ்சூர்மார்க் ரயில் நிலையத்தில் ரயில் மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பீகாரில் சிஏஏ ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல் - 15 பேர் காயம்