கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுக்க பொதுமுடக்கம் (லாக்டவுன்) அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் ஆங்காங்கே சிக்கித் தவித்தனர்.
இவ்வாறு ஜம்மு காஷ்மீரில் சிக்கித் தவித்த ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 217 பேர் அவர்களின் சொந்தப் பகுதிக்கு திரும்பியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அரசின் முழு வழிகாட்டுதலின்படி ரயில்கள் மற்றும் பேருந்துகள் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டதாக அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரிலிருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 64 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
காஷ்மீரிலிருந்து சொந்த மாநிலம் திரும்பியவர்களில் 328 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதிகப்பட்சமாக உதயம்பூரிலிருந்து 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க: கான்பூர் சிறுமிகளுக்கு உரிய சிகிச்சை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!