நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சமீபத்தில் அறிவித்திருந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இஸ்ரோ தலைவர் சிவன், "நீண்ட நாட்களுக்கு முன்னரே லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். இதுகுறித்த தகவல்களை இஸ்ரோ இணையதளத்திலும் நீங்கள் காணலாம்" என்றார்.
ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், சந்திரயான் 2 இன் ஆர்பிட்டார் உதவியுடன் லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை இஸ்ரோ கண்டுபிடித்ததாகவும் இந்தத் தகவல்களை நாசா சரிபார்க்கத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக நாசாவின் Lunar Reconnaissance Orbital Camera என்ற விண்கலம் வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியம் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில், டிசம்பர் 2ஆம் தேதி லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை கண்டுபிடித்தாக நாசா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆறுதல் கடிதம் அனுப்பிய மாணவனுக்குப் பதிலளித்த இஸ்ரோ சிவன்!