இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 30 சதவீதம் பேருக்கு டெல்லி சமய மாநாட்டில் தொடர்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதேபோல் இந்தியாவில் கரோனா பரவியதற்கு இஸ்லாமியர்களே காரணம் என்று சில இடங்களில் வெறுப்பு பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து இஸ்லாமிய ஒருங்கிணைப்புக்கான அமைப்பு சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ''இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பரப்புரை கவலையளிக்கும் விதமாக உள்ளது. சமீபத்திய நிகழ்வுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுகள் அதிகமாக எழுகின்றன. கரோனா வைரஸை பரப்பியதாக இஸ்லாமியர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
கரோனா பரவியதற்கு இஸ்லாமியர்களை விரல்காட்டுவதை விடுத்து அனைவரும் சேர்ந்து கரோனாவுக்கு எதிராக செயல்படுவோம். அனைவரும் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே இந்த நாட்டிலிருந்து கரோனாவை விரட்ட முடியும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மே 3ஆம் தேதி வரை எந்த தளர்வும் கிடையாது! - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்