ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை டெல்லி சிறப்பு நீதிமன்றம், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, மாநிலங்களவை உறுப்பினர் கே.டி.எஸ் துளசி கூறுகையில், "வழக்கின் விவரங்கள் குறித்து எனக்கு தெரியாது. எனவே, அதற்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மட்டும் விசாரணை அமைப்புகள் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது அரசியலமைப்பை கேலி கூத்தாக்கும் செயல்" என்றார்.
சிதம்பரம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மனோஜ் ஜா, "விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகளை பார்த்தால் அரசியலமைப்புக்கு அழுத்தம் தரப்படுகிறது என்பது தெரிகிறது. நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கேள்வி எழுப்ப விரும்பவில்லை. இது நாட்டுக்கள் நல்லதல்ல. விசாரணை அமைப்புகள் வற்புறுத்தலுக்கு உள்ளாகிறது" என்றார்.