ETV Bharat / bharat

ஒரு வயது குழந்தைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காவல்துறை! - குழந்தை பிறந்தநாளை கொண்டாடிய இந்தூர் காவல்துறை

இந்தூர்: ஒரு வயது குழந்தை கிதிஷாவின் பிறந்தநாளை இந்தூர் காவல் துறையினர் கேக் வெட்டி விமரிசையாகக் கொண்டாடினர்.

ஒரு வயது குழந்தைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காவல்துறை!

author img

By

Published : May 26, 2020, 9:38 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் திருமலை நகரத்தைச் சேர்ந்த ரவி மஞ்சானியின் மகள் கிதிஷா. குழந்தையின் முதல் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட பெற்றோர் விரும்பினர். இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் இந்தூர் காவல் துறையின் உதவியை நாடினர்.

இந்த கோரிக்கைக்கு செவிமடுத்த காவல் துறையினர், குழந்தையின் பிறந்தநாளன்று வாழ்த்து பாடல் ஒலிக்க கேக்குடன் சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இது குறித்து கிதிஷாவின் தந்தை ரவி, “இப்போது என் மகளுக்கு ஒரு வயது நிறைவடைந்துவிட்டது. அவளின் முதல் பிறந்தநாளைக் காவல் துறையினர் மிகவும் சிறப்பானதாக மாற்றிவிட்டார்கள். அவர்களுக்கு நன்றி” என்றார்.

ஏரோட்ரோம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் அசோக் பட்டீதர், “பொதுவாக காவலர்கள் யாரையாவது கைது (அ) விசாரணை செய்யத்தான் அவர்களுடைய வீட்டிற்குச் செல்வார்கள். ஆனால், நாங்கள் ஒரு வயது குழந்தையின் பிறந்தநாளைத் தெரிந்துகொண்டு, கேக் வெட்ட ஏற்பாடு செய்தோம். பின்னர் குழந்தையின் வசிப்பிடத்திற்கு நேரடியாக விரைந்து வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு பிறந்தாளைக் கொண்டாடினோம்” என்றார்.

இதையும் படிங்க: இளவரசி சார்லோட் பிறந்தநாள்... ஸூம் அழைப்பில் ஒன்றுகூடும் குடும்பத்தினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.