ETV Bharat / bharat

வருங்காலங்களில் பெருந்தொற்றை தடுக்க ஒரே வழி என்ன?

author img

By

Published : Jul 7, 2020, 8:37 PM IST

வருங்காலங்களில் வரும் பெருந்தொற்றை எப்படி கையாண்டு தடுக்க வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.

வருங்காலங்களில் வரும் பெருந்தொற்றை தடுக்க ஒரே வழி என்ன?

சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள வனவிலங்கு சந்தையில் உருவான கரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியாவில் சுமார் ஐந்து லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது 'ஜூனோடிக் நோய்’. பொதுவாக காலநிலை மாற்றம், சுற்றுச் சூழல் பேரழிவு, வனவிலங்கு சுரண்டல் ஆகியவற்றின் காரணிகளால் உருவாகிறது. ‘ஜூனோடிக் நோய்’ அல்லது ‘ஜூனோசிஸ்’ என்பது பொதுவாக விலங்கிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ILRI) ஆகியவற்றின் ஆய்வின்படி, மேற்கூறிய காரணங்கள் அனைத்தும் பெருந்தொற்றுக்கான காரணியாகும். இவற்றை புரிந்து கையாண்டால், உலக நாடுகள் பெருந்தொற்றிலிருந்து விரைவாக வெளிவரமுடியும்.

1996ஆம் ஆண்டு பரவிய பறவை காய்ச்சல், 1998ஆம் ஆண்டு வந்த நிபா வைரஸ், 2003இல் உருவான சார்ஸ் என அனைத்தும் சீனாவிலிருந்து பரவியுள்ளன. மேலும், ஆப்பிரிக்காவிலிருந்து உருவான எபோலா, மெர்ஸ், வெஸ்ட் நைல் காய்ச்சல் உள்ளிட்டவை விலங்கிடமிருந்தே மனிதனுக்கு பரவுகிறது.

இது குறித்து ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட இயக்குநர் இங்கர் ஆண்டர்சன் கூறுகையில், விலங்கிடமிருந்து மனிதனுக்கு பரவும் நோய்கள் அதிகரிப்பது மனித ஆரோக்கியத்திற்கான ஒரு அச்சுறுத்தலாகும். இந்தப் பெருந்தொற்றை கையாள, முதலில் அதை பற்றியான புரிதலை நாம் உணர வேண்டும். அப்படி தற்போதுள்ள கோவிட் -19 மிக மோசமான ஜினோடிக் நோய்களில் ஒன்றாகும்.

இந்தப் பெருந்தொற்று பரவல் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னதாக எபோலா, எஸ்ஏஆர்எஸ், மெர்ஸ், எச்.ஐ.வி என பல பெருந்தொற்றுகள் நம்மை ஆட்கொண்டுள்ளது. இருந்தபோதிலும், இன்றளவும் பெருந்தொற்றை கையாள நம்மால் முடியவில்லை” என்றார்.

ஒரு சுகாதார முறை கையாண்டு மனித-விலங்கு-சுற்றுச்சுழல் இணைப்பை கையாண்டால் பெருந்தொற்றை தடுக்கலாம். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டமும் (UNEP), சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனமும் (ILRI) சேர்ந்து ஒன் ஹெல்த் என்ற ஒன்றை உலக நாடுகளுக்கு அறிவுறுத்துகின்றன. அவற்றின் மூலம் மனித-விலங்கு உறவை கையாளும் முறை, இறைச்சியின் தேவை அதிகரிப்பு காரணம், சுற்றுச்சூழல் சீர்குலைவு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஜிம்மி ஸ்மித் கூறுகையில், உலகின் தற்போதைய காலநிலை மாற்றம் பல உயிரியியல் நோய்களை உண்டு பண்ண வழிவகுக்கின்றன” என்றார்.

ஆய்வின்படி பார்த்தால், தேவையான உணவு முறைகள், நிலையான நில மேலாண்மை, நோய்களின் பரவல் கண்காணிப்பு உள்ளிட்டவையே பெருந்தொற்றிலிருந்து நம்மை காக்கும் விடுவிக்கும் என்பதில் ஐயமில்லை. மொத்ததில் இயற்கையோடு இயைந்து வாழவேண்டுமே தவிர, இயற்கை அழித்தோ சவால் விட்டோ வாழ்ந்தால் மனித குலத்திற்கும் அழிவு என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க....ஐடி தலைநகரில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.