ETV Bharat / bharat

பணியை துறந்து குளத்தை தூர்வாரும் பட்டதாரி! - noida

நொய்டாவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராம்வீர் தன்வர், ஐந்து ஆண்டுகளில் இதுவரை ஏழு குளங்களை சுத்தம் செய்திருக்கிறார். இந்த நற்பணிக்காக பன்னாட்டு நிறுவனத்தில் இவர் பார்த்து வந்த வேலையையும் ராஜினாமா செய்திருக்கிறார்.

ராம்வீர் தன்வர்
author img

By

Published : Apr 10, 2019, 4:04 PM IST

நாடெங்கிலும் உள்ள குளங்களையும், நீர்வளங்களையும் பாதுகாப்பதே தன் லட்சியமாகக் கருதி 26 வயது பொறியியல் பட்டதாரி பணியாற்றி வருகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் பிறந்த ராம்வீர் தன்வர், பெரிய பன்னாட்டு நிறவனத்தில் பார்த்து வந்த வேலையை துறந்துவிட்டு ஐந்து ஆண்டுகளில் ஏழு குளங்களை தூர்வாரியுள்ளார். தன்வர் ஏரிகளை எளிமையாவும் பண விரயமின்றி தூர்வாருவதை பிரதானமானதாக கருதுகிறார். இது விவசாயிகளை உற்சாகப்படுத்தும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

தன்வரின் இந்த மகத்தான சேவைக்கு சமீபத்தில் மத்திய அரசு நிதி வழங்கியும் கவுரவித்தும் இருக்கிறது. மேலும் பல தனியார் நிறுவனங்களும் தன்வருக்கு பொருளுதவி செய்துவருகின்றன. தன்வர் தற்போது தான் வசிக்கும் பகுதியில் அமைந்திருக்கும் குளங்களை தூர்வாரியது மட்டுமின்றி அருகில் இருக்கும் கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள குளங்களை சுத்தம் செய்து வருகிறார்.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/state/uttar-pradesh/this-mechanical-engineer-quits-his-job-to-revive-indias-dying-ponds-1-1/na20190410094418253

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.