சமய மாநாட்டில் கலந்துகொண்டு கரோனா வைரஸ் நோயை திட்டமிட்டு இஸ்லாமியர்கள் பரப்பியதாக மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஒரு சிலர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சிலர் கருத்து தெரிவிப்பதாக இஸ்லாமிய ஒத்துழைப்புக் குழு கவலை தெரிவித்தது.
இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில், "கரோனாவுக்கு எதிரான போரில் வகுப்புவாதத்தைத் தூண்ட முயற்சிக்க வேண்டாம். இந்தக் குற்றச்சாட்டு சரியானது அல்ல. இந்தியா, அரபு நாடுகளுடன் கொண்ட உறவை சிதைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் சிலர் கருத்து தெரிவித்ததற்கு அரபு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செய்தியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் - மத்திய அமைச்சர்!