ETV Bharat / bharat

இயற்கை காதலியால் கரோனா காலத்தில் உயிர்பெற்ற 10 ஆயிரம் மரங்கள்!

அங்கூல் : மரக்கன்றுகள் நடுவதற்காக மட்டுமே, இதுவரை தனது சொந்தப் பணம் எட்டு லட்சம் ரூபாயை அறிவியல் ஆசிரியர் கீதாஞ்சலி செலவு செய்து அவற்றைப் பராமரித்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

osi
di
author img

By

Published : Sep 10, 2020, 5:09 PM IST

நாம் வாழும் பூமியை பசுமையாக பார்த்துக்கொள்வது நமது கடமையாகும். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் பல நூற்றாண்டுகால பாராம்பரியத்தைக் கொண்ட மரங்களை ஒரே நொடியில் வேரோடு சாய்த்துவிட்டு, நாம் கட்டடங்கள் கட்டுகிறோம். தற்போது, இதற்கு எதிராக பல்வேறு பசுமை அமைப்புக்கள் குரல் எழுப்பி வருகின்றன. மரங்களின் அவசியத்தை மக்களுக்கு இந்த அமைப்புகள் உணர்த்தி வருகின்றன.

ஆனால், இதுபோன்று குழுவாக செயல்படும் அமைப்புகளால் மட்டுமே இவை சாத்தியம் எனக் கருதாமல், தனி ஆளாகக் களத்தில் இறங்கி, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை இந்த கரோனா காலகட்டத்தின் மத்தியில் நட்டு வரும் சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஒடிசா மாநிலம், அங்கூல் மாவட்டத்தின் புதபங்கா கிராமத்தில் பிறந்தவர் கீதாஞ்சலி சமல். இவர் தாவரவியல் படிப்பில் உயர் கல்வி முடித்துள்ளார். இவரின் கணவர் கிஷோர் குமார் வங்கி ஊழியராகப் பணியாற்றி வருகிறார். தற்போது, கீதாஞ்சலி சாகர் வித்யாபித் என்ற பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தங்களது பள்ளி வளாகத்திலேயே இவர் பல்வேறு வகையான மரங்களையும் நட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தக் கரோனா காலக்கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் தன் சொந்த ஊருக்குத் திரும்பிய கீதாஞ்சலி, அங்கும் மரம் நடும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும், அங்கூலின் பல்வேறு இடங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அவர் நட்டுள்ளார்.

மேலும் ஆச்சரியமூட்டும் வகையில், தோட்ட செலவுகளுக்காக மட்டும் இதுவரை தனது சொந்தப் பணம் எட்டு லட்சம் ரூபாயை அவர் செலவிட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் வரும் சம்பளத்தில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை தோட்ட வேலைக்கு அவர் ஒதுக்கி வருகிறார்.

கீதாஞ்சலியின் இந்த முயற்சிகளைப் பார்த்து வியந்த பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தோட்டக் கலை மீதான அவரது ஆர்வத்தை வரவேற்று பாராட்டி வருகின்றனர். யாரேனும் நிதியுதவி வழங்குவதாகத் தெரிவித்தாலும் அதை வாங்க மறுக்கும் கீதாஞ்சலியின் செயலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தனது ஸ்கூட்டியில் மரக்கன்றுகளை சுமந்து சென்று நடவு செய்யும் இவர், அதற்காக குழி தோண்டும் தொழிலாளர்களுக்கும் கட்டணத்தை அளித்து விடுகிறார். அதுமட்டுமின்றி மரம், கால்நடைகளால் மரக்கன்றுகள் சேதமடைத்து விடக்கூடாது என்பதற்காக மேக்-ஷிப்ட் வேலியை உருவாக்கி அவ்வப்போது தண்ணீர் ஊற்றிப் பராமரித்தும் வருகிறார்.

ஊருக்குள் இருந்தாலும், வெளியே இருந்தாலும், திறந்தவெளியைக் கண்டால் ஒரு மரக்கன்றையாடும் நடும் கீதாஞ்சலியின் இச்செயல், இயற்கை மீதான அவரது காதலை உணர்த்தி, அவரைச் சுற்றி உள்ளோரையும் இயற்கை ஆர்வலர்களாக மாற்றி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.