ETV Bharat / bharat

ஒடிசாவில் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு! - ஒடிசாவில் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!

புவனேஸ்வர்: கரோனா தொற்று காரணமாக பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதித் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

Exam
Exam
author img

By

Published : Dec 8, 2020, 6:24 AM IST

ஒடிசா மாநிலத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் எதுவும் நடத்த இயலாத வகையில் தற்போதுவரை கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் திறக்க முடியாத சூழ்நிலையில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே, பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக ஒடிசா கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டாலும் பெரும்பாலான மாணவர்கள் பல்வேறு காரணங்களால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பலன்களைப் பெற முடியவில்லை. தற்போது, ​​ஆன்லைன் வகுப்புகள் அடிப்படையில் தேர்வை நடத்துவது சரியானதாக இருக்காது. எனவே, கல்லூரிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகளில் பாடத்திட்டங்கள் நடத்தப்பட்ட பின்னரே தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யவேண்டும் எனக் கல்வித்துறை அமைச்சகம் அனைத்து மாநில பொது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா கல்லூரிகளின் அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஒடிசாவில் நேற்று (டிசம்பர்.7) கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 368 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 21 ஆயிரத்து 564 அதிகரித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.