ETV Bharat / bharat

கழிவறையில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளான இளைஞர் - அறிகுறிகளற்ற கரோனா வைரஸ் பாதிப்பு

புவனேஸ்வர்: தமிழ்நாட்டிலிருந்து ஒடிசா திரும்பிய இளைஞரை அப்பகுதி மக்கள் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு வற்புறுத்தி ஏழு நாள்கள் கழிவறையில் அடைத்துவைத்துள்ளனர்.

odisha-man-spends-7-days-in-toilet-as-home-quarantine

author img

By

Published : Jun 18, 2020, 9:55 AM IST

ஒடிசா மாநிலம் ஜகதீஷ்சிங்பூர் மாவட்டம் ஜமுகான் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் மானஸ்பட்டா. இவர் தமிழ்நாட்டில் தினக் கூலியாக வேலை பார்த்துவந்தார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வேலை இழந்த இவர் சொந்த ஊர் செல்ல விரும்பினார்.

இதற்காக இ-பாஸ் விண்ணப்பித்த அவருக்கு தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர் எந்தவித அறிகுறிகளுமின்றி கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என எண்ணிய மருத்துவர்கள் இவரைத் தமிழ்நாட்டிலேயே ஏழு நாள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்துவந்தனர்.

பின்னர் இவர் குணமடைந்துவிட்டதாகக்கூறி வீட்டிற்குச் செல்ல அனுமதித்தனர். இவர் ஒடிசா சென்ற நிலையில், அப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஏழு நாள்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறி, அவரது கிராம மக்கள் அவரைக் கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, ஒடிசா மாநில அரசின் தனிமைப்படுத்தும் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு போதிய அளவு படுக்கை வசதி இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்,

இந்நிலையில், அவரது கிராம மக்கள் மானஸ்பட்டா தமிழ்நாட்டில் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், இங்கு மீதமுள்ள ஏழு நாள்கள் மட்டும் தனிமைப்படுத்திக்கொண்டால் போதும் எனக்கூறியுள்ளனர்.

இருப்பினும், அவரை தனிமைப்படுத்திக்கொள்ள வீட்டில் போதிய வசதி இல்லை என்பதை அறிந்த மக்கள் வீட்டிற்கு அருகில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள கழிவறையிலேயே ஏழு நாள்களும் தங்கியிருக்குமாறு கூறியுள்ளனர். இதன் காரணமாக மானஸ்பட்டா கடந்த ஏழு நாள்களாக (ஜூன்9- ஜூன் 15) கழிவறையிலேயே தங்கியிருந்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.