கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவிலும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, போக்குவரத்து பெருமளவு குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவை சந்தித்தது.
மேலும் ஊரடங்கால் தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால், அரசின் வருவாய் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் விலையையும், பெட்ரோல் மீதான கலால் வரியையும் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
இந்நிலையில், ஒடிசா அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, ஒடிசா மாநிலத்தில் 26 சதவிகிதமாக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி 32 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.11 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதேபோல் 26 சதவிகிதமாக இருந்த டீசல் மீதான கலால் வரி 28 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டு, டீசல் லிட்டருக்கு 1.08 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த வரி உயர்வு அம்மாநிலத்தில் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க : வரி உயர்வு நடவடிக்கை தொடர வாய்ப்பு?