ஒடிசா மாநிலம் போலங்கிர் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பணியாற்றி வருபவர் சஞ்சய் மிஸ்ரா. இவர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அதே அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி கொடுத்த இந்தப் புகாரில், ''ஆகஸ்ட் 14ஆம் தேதி அலுவலக அறையில் தனியாக இருந்தபோது தன்னை சீண்டினார். தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் எனது இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு கணவர் இல்லை என்பதால் மறுவாழ்வு திட்டத்தின் மூலம் ஜூலை 28ஆம் தேதி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கிளார்க்காக பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாலியல் துன்புறுத்தல் புகாரில் சிக்கிய உதவி ஆட்சியர் சஞ்சய் மிஸ்ரா, அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் ஆட்சியரின் அனுமதியின்றி தலைமையகத்தை விட்டு வெளியேறக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தற்சார்பு இந்தியா என்ற பெயரில் நாட்டையே தனியாருக்கு விற்கிறது மத்திய அரசு - சிபிஐ(எம்)