ஒடிசாவில் கோவிட் 19 கரோனா வைரஸ் தொற்று பரவல் வீரியமாக உள்ளது. இதனால் அங்கு ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டுவருகிறது.
இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகள் இரு வாரங்களில் நிறைவடையும். இந்நிலையில் சட்டப்பேரவை அலுவலர்களில் ஒருவருக்கு கரோனா பாதிப்ப இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனால் சட்டப்பேரவையில் பணிபுரியும் மற்ற அலுவலர்களும் ஒருவருக்கொருவர் தங்களின் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என சபாநாயகர் சூரிய நாராயணன் பத்ரா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் சுப்ரோடா பாக்சி கூறுகையில், “கோவிட்19 வைரஸ் தொற்று நோய் பாதித்த மூன்று நபர்கள் சட்டப்பேரவைக்கு வந்ததாக கூறினார்.
மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஒடிசாவில் 34 பேர் கரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குஜராத்திலிருந்து வடமாநில தொழிலாளர்கள் வெளியேற்றம்!