ETV Bharat / bharat

கோவிட்-19 பாதிப்பால் பணி நீக்கம்: நீதிமன்றத்தை நாடிய செவிலியர்!

author img

By

Published : Jul 24, 2020, 3:53 PM IST

கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்ட செவிலியரை பணி நீக்கம் செய்ததற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

nurse-infected-with-covid-19-approaches-delhi-hc-after-hospital-sacks-her-83-staff-members

இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்களின் பணி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதனிடையே டெல்லியில் செயல்பட்டு வரும் ஹெச்ஏஹெச் மருத்துவமனையில் பணி செய்து வந்த 84 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர் குஃப்ரானா கட்டூன், டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஹம்டார்ட் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் குஃப்ரானா கட்டூன் (Gufrana Khatoon). இவருக்கு ஜூலை 3ஆம் தேதி கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனிடையே கரோனா அறிகுறி காணப்பட்டும் அவருக்கு இலவச கரோனா பரிசோதனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதியன்று, மருத்துவமனை நிர்வாகம் சார்பாக 84 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த பணிநீக்க ஆணையில், ''அனுமதியின்றி விடுப்பு எடுத்தல் மற்றும் விடுப்பு பற்றி மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறியப்படுத்தவில்லை'' என்று காரணம் கூறப்பட்டிருந்தது.

ஆனால் இவர்களில் பலரும் ஜூலை 11ஆம் தேதி வரை பணியில் இருந்ததாகவும், சிலர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், '' கரோனா வார்டுகளில் பணிசெய்யும் சுகாதார பணியாளர்கள் பலருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கரோனா வார்டுகளில் பணிபுரியும் அனைவருக்கும் என்-95 முகக்கவசம், சுத்தமான குடிநீர், இலவச கரோனா பரிசோதனை, தனிமைப்படுத்திக் கொள்ளவதற்கான பிரத்யேக அறைகள் ஆகியவற்றை கேட்டதால் தான் நாங்கள்பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளோம்.

கரோனா வைரஸ் சூழலில் எந்த நிர்வாகமும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவுகளை மீறி மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டுள்ளது.

மே 16ஆம் தேதி பணியில் சேர்ந்த எனது ஒப்பந்தம் சரியான நேரத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த ஆண்டு செப் 11ஆம் தேதி வரை எனது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 11ஆம் தேதி பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.

சுகாதார பணியாளர்களுக்கு தேவையான நியாயமான கோரிக்கைகளை எழுப்பியதற்காகவே 84 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம்

நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்னதாக ஒருங்கிணைந்த செவிலியர்கள் சங்கம், தொழில்முறை செவிலியர்களின் தொழிற்சங்கம் ஆகியவை மூலமாக டெல்லி முதலமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆகியோரிடம் புகாரளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விதிகளை மீறி பணிநீக்கம் செய்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிகார் வெள்ளம்: 7.65 லட்சம் பேர் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.