ETV Bharat / bharat

வெளியேற்றப்பட்ட சீன டிராகன்கள்; வெற்றிடத்தைக் கைப்பற்றுமா இந்தியப் புலிகள்? - banned Chines Apps

டெல்லி: மத்திய அரசு 59 சீனச் செயலிகளைத் தடைசெய்ததையடுத்து இணையத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இந்திய நிறுவனங்கள் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகம் என்று சைபர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

banned Chines Apps
banned Chines Apps
author img

By

Published : Jul 6, 2020, 1:46 PM IST

இந்தியாவின் இறையாண்மை மற்றும் இந்தியர்களின் தனியுரிமை ஆகியவற்றுக்கு ஆபத்தை ஏற்படும் வகையில் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி மத்திய அரசு 59 சீனச் செயலிகளுக்குக் கடந்த மாதம் இறுதியில் தடைவிதித்தது.

மத்திய அரசின் தடை குறித்த அறிவிப்பு வெளியானதும், இணையத்தில் இந்தச் செயலிகள் அதிகளவில் தேடப்பட்டுள்ளன. அதாவது தடைவிதிக்கப்பட்ட ஜூன் 29ஆம் தேதி, டிக்டாக் செயலியின் தேடல் 229 விழுக்காடும் வீ-சாட் செயலியின் தேடல் 255 விழுக்காடும் அதிகரித்துள்ளன. அதேபோல, வெய்போ, ஷேர்இட், யூ.சி.பிரவுசர் ஆகிய செயலிகளின் தேடல் முறையே 57, 78, 82 விழுக்காடு அதிகரித்ததாக SEMrush என்ற சைபர் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், அடுத்தடுத்த நாள்களில் சீனச் செயலிகள் குறித்த தேடல் என்பது கணிசமாகக் குறைந்துள்ளது. ஜூன் 30ஆம் தேதி டிக்டாக் தேடல் 23 விழுக்காடு வரை குறைந்துள்ளது. அதேபோல ஷேர்இட், யூ.சி.பிரவுசர் ஆகிய செயலிகளின் தேடலும் முறையே 11, 12 விழுக்காடு வரை குறைந்துள்ளது.

அதேபோல ட்விட்டரில், #RIPTikTok என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி 18,185 ட்வீட்கள் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றில் 19 விழுக்காடு நேர்மறையானதாகவும், 62 நடுநிலையானதாகவும், 19 விழுக்காடு எதிர்மறையானதாகவும் இருந்துள்ளன. அதேபோல, ஷேர்இட் குறித்து பதிவிடப்பட்ட 2,054 ட்வீட்களில் 23 விழுக்காடு நேர்மறையானதாகவும், 38 விழுக்காடு நடுநிலையானதாகவும், 39 விழுக்காடு எதிர்மறையானதாகவும் இருந்துள்ளன.

மற்ற செயலிகள் தடைசெய்யப்பட்டதையும் வரவேற்கும் வகையிலேயே பெரும்பாலான மக்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, நெட்டிசன்களின் மனநிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்த 59 செயலிகளைத் தடைசெய்திருப்பதை பெரும்பாலான இந்தியர்கள் ஆதரிக்கின்றனர் என்று அறியமுடிகிறது.

இதுகுறித்து SEMrush நிறுவனத்தின் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பெர்னாண்டோ அங்குலோ கூறுகையில், "எங்கள் ஆய்வு இந்திய அரசுக்கும் இந்திய நிறுவனங்களுக்கும் வழிகாட்டியாகச் செயல்படுகிறது. இந்தத் தடை குறித்து இந்திய மக்கள் எப்படி உணருகிறார்கள் என்பதை அரசு இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

சீனச் செயலிகள் புகழ்பெற்றவையாக இருந்தாலும், இந்தியர்களின் இந்தியாவின் இறையாண்மைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். மேலும், சீனச் செயலிகள் தடையால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இந்திய நிறுவனங்கள் நிரப்பும் வாய்ப்பு அதிகம்.

சீன செயலிகளின் தேடல் என்பது கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது இந்திய சைபர்-ஸ்பேஸில் சீன டிராகன் வெளியேற்றப்ட்டுள்ளது. இந்தியப் புலிகள் அந்த இடத்தைக் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது" என்றார்.

இதையும் படிங்க: சீன எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில் வெளியான ஒன்பிளஸின் புதிய டிவிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.