உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசுகள் இந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
இதையடுத்து நாடு முழுவதிலும் நான்கு மாநிலங்களிலுள்ள, 75 மாவட்டங்களில் வாகன கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு மார்ச் 22ஆம் தேதி இரவு 9 மணி முதல் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
இதனால் கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு அண்டை மாநில வாகனங்கள் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனமும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதி எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது.
மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு, பள்ளித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், தேவாலயங்கள், கடற்கரை பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் முடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: புதுச்சேரியில் வெளிமாநில வாகனங்களுக்குத் தடை!