- இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள்சமூகநீதி போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன்
தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டியும் தன்னிகரில்லா தலைவருமான இரட்டைமலை சீனிவாசனின் 161ஆவது பிறந்ததினம் இன்று.
- மன்னர் மன்னன் இறுதிச் சடங்கு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான மன்னர்மன்னன் புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஜூலை6) காலமானார்.
![EtvBharatNewsToday NewsToday MS Dhoni Birthday Irattai MalaiSeenivasan MannarMannan 2012 Russia Flood இன்றைய செய்திகள் மகேந்திரசிங் தோனி பிறந்தநாள் இரட்டைமலை சீனிவாசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7922447_mannan.jpg)
அவரது இறுதிச் சடங்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறும். மன்னர் மன்னனுக்கு அமுதவல்லி என்ற மகளும், செல்வம், தென்னவன், பாரதி என்ற மூன்று மகன்களும் உள்ளனர். இவரின் மனைவி 30 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்.
- தோனி பிறந்தநாள்மகேந்திர சிங்(கம்) தோனி
ராஞ்சியில் பிறந்து தனது ராட்டினம் போல் சுழலும் பேட்டாலும், பொறுமையாலும் உலககோப்பை முதல் உள்ளூர் கோப்பை வரை தனதாக்கிய மகேந்திரசிங் தோனி இன்று தனது 39ஆவது வயதில் அடியெடுத்துவைக்கிறார்.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
![EtvBharatNewsToday NewsToday MS Dhoni Birthday Irattai MalaiSeenivasan MannarMannan 2012 Russia Flood இன்றைய செய்திகள் மகேந்திரசிங் தோனி பிறந்தநாள் இரட்டைமலை சீனிவாசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7922447_rain.jpg)
காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூலை7) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கரோனா பரிசோதனை முகாம்
![EtvBharatNewsToday NewsToday MS Dhoni Birthday Irattai MalaiSeenivasan MannarMannan 2012 Russia Flood இன்றைய செய்திகள் மகேந்திரசிங் தோனி பிறந்தநாள் இரட்டைமலை சீனிவாசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7922447_corona.jpg)
கரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், சென்னை முழுவதும் இன்று 560 மருத்துவ முகாம்களை சென்னை மாநகராட்சி நடத்துகிறது.
பெருவெள்ளம்
2012ஆம் ஆண்டின் இதே தினத்தில் ரஷ்யாவின் கிராஸ்னோடர் கிராய் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 172 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு, முடிவை வாபஸ் பெற மம்தா வலியுறுத்தல்