தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனாவைப் பற்றியோ அல்லது கிழக்கு லடாக் பகுதியில் நடந்துகொண்டிருக்கும் மோதலைப் பற்றியோ பேசவில்லை என்றும் மாறாக அவர் ஆன்மிக சூழலில் அதனை சார்ந்த கருத்துகளை மட்டுமே கூறினார் என்று மத்திய அரசின் உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
அஜித் தோவல் தனது சமீபத்திய பேச்சில், இந்தியா-சீனா இடையே லடாக் பகுதியில் நிலவிவரும் சூழல் குறித்து மறைமுகமாக பேசியதாக சில ஊடகங்கள் செய்திவெளியிட்டதையடுத்து, இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி ரிஷிகேஷின் பர்மார்த் நிகேதன் ஆசிரமத்தில் இருந்த தோவால், இந்தியாவின் ஆன்மிகம் தொடர்பாக அங்குள்ள பக்தர்களிடம் உரையாற்றினார், அப்போது சுவாமி விவேகானந்தர் பற்றியும் குறிப்பிட்டார்.
"நாங்கள் ஒருபோதும் யாரையும் தாக்கவில்லை, என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால் அதைப் பற்றி பல கருத்துகள் உள்ளன. நாட்டிற்கு அச்சுறுத்தல் இருந்தால், நாட்டைக் காப்பாற்றுவது முக்கியம் என்பதால் நாங்கள் தாக்கியிருக்க வேண்டும். நாங்கள் எங்கு போராட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அங்கு நாங்கள் போராடுவோம், அதுவும் கட்டாயமில்லை. அச்சுறுத்தல் வருவதாக நாங்கள் நினைக்கும் இடத்தில் நாங்கள் போராடுகிறோம். சுயநல காரணங்களுக்காக நாங்கள் அதை ஒருபோதும் செய்யவில்லை” என்று பேசினார்.
மேலும், தேசம் என்பது ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பாகும், இது ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத்தின் பொதுவான நூலால் பிணைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.