ETV Bharat / bharat

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு கரோனா - முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினருக்குப் பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

NR Congress MLA Jeyapal
என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபால்
author img

By

Published : Jul 25, 2020, 9:36 AM IST

புதுச்சேரியில் கதிர்காமம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயபால். இவருக்கு, கடந்த இரண்டு நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்குப் பரிசோதனை எடுக்கப்பட்டதில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து ஜெயபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில், முதல் முறையாகப் புதுச்சேரியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கு வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், கடந்த 20ஆம் தேதி கூடிய சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற ஜெயபால், தொடர்ந்து நான்கு நாட்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.

இதன் காரணமாக, மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் தற்போது கலக்கமடைந்துள்ளனர். மேலும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன், ஏற்கனவே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து, என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரும், புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான ரங்கசாமி, சட்டப்பேரவை நிகழ்வுகளில் முகக்கவசம் இன்றி பங்கேற்றார். தற்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஜெயபால் இரு நாள்களுக்கு முன்னர் முகக்கவசம் அளித்த போதும், அதை வாங்கி சட்டை பைக்குள் வைத்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, எதிர்கட்சி தலைவர் உள்பட அவருடன் தொடர்புடைய எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவையின் மாண்பை காப்பாற்றவே பட்ஜெட் தாக்கல் செய்தேன் - நாராயணசாமி சூசகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.