ETV Bharat / bharat

இல்ல.. இது சாதாரணமா தோணல.. ஏதோ இருக்கு! பீதி கிளப்பும் இஸ்ரேல்!

டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது கண்டெடுக்கப்பட்ட துண்டு பிரசுரங்களில் இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்கள் இருந்தன என்று அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

blast outside at Israel Embassy news  Israel's ambassador to India Ron Malka  Israeli Embassy Blast news  latest news on Ron Malka  இஸ்ரேல்  குண்டுவெடிப்பு  டெல்லி  ரான் மல்கா  evil attack  Israeli envoy

author img

By

Published : Jan 30, 2021, 9:53 PM IST

டெல்லி: டெல்லி இந்திய தூதரகத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், இது பயங்கரவாத சம்பவம் என்று நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “2012ஆம் ஆண்டு தாக்குதல்களுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா? என ஆராய்ந்துவருகிறோம்.

ஆசிய (மேற்கு) பிராந்தியத்தில் எங்களின் ஸ்திரத்தன்மையை இந்தத் தாக்குதல், தாக்குதல் முயற்சிகள் மூலம் தடுக்கவோ, பயமுறுத்தவோ முடியாது. எங்கள் அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும். மேலும், அரபு நாடுகளுடனான இஸ்ரேலின் சமாதான முயற்சிகளையும் தகர்க்க முடியாது. அதுவும் தங்கு தடையின்றி நடைபெறும்” என்றார்.

மேலும் இந்தத் தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்கள் கிடைத்துள்ளன” என்றார்.

டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட ஐ.இ.டி வெடிப்பொருள் வெள்ளிக்கிழமை (ஜன.30) மாலை வெடித்தது. இந்தத் தாக்குதலில் யாரும் காயமடையவில்லை.

இதையும் படிங்க: இஸ்ரேல் தூதரகம் குண்டுவெடிப்பு; ஈரானிய அமைப்புகளுக்கு தொடர்பா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.