அசாம், திரிபுரா, மிசோரம் உள்ளிட்ட எட்டு வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை 4,426 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 ஆயிரத்து 49 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை அசாமில் அதிகப்படியாக 2,937 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரிபுராவில் 866 பேர், மணிப்பூரில் 304 பேர், நாகாலாந்து 127 பேர், மிசோரமில் 88 பேர், அருணாச்சலப் பிரதேசத்தில் 57 பேர், மேகலயா 43 பேர், சிக்கிம்மில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தடைந்த நான்கு லட்சம் பேரால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும், வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தடைந்தவர்களின் மாதிரிகளைத் தொடர்ந்து சோதனை செய்யும் பணி நடைபெறுவதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் மத்தியச் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க:ம.பி.யில் மருத்துவர் ஒருவர் கரோனாவால் உயிரிழப்பு!