ETV Bharat / bharat

சிதம்பரத்துக்கு எதிராக தகுந்த ஆதாரங்கள் இல்லை - உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தனக்கு எதிரான சாட்சியங்களை சிதம்பரம் கலைத்துவிடுவார் என்ற சிபிஐயின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

Chidambaram
author img

By

Published : Oct 23, 2019, 1:46 AM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரையும் சிபிஐ சேர்த்தது.

இந்த வழக்கில் முன்பிணை கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செப்டம்பர் 5ஆம் தேதி அவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிணைக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், சிதம்பரத்துக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நீதிமன்றம், தனக்கு எதிரான சாட்சியங்களை சிதம்பரம் தன் பக்கம் இழுப்பார் என்னும் சிபிஐயின் வாதம் தேவையற்றது. இதுகுறித்த ஆதாரங்களையும் சிபிஐ அளிக்கவில்லை. வயது மூப்பு காரணமாக சிதம்பரம் பாதிக்கப்பட்டுள்ளார். இதை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்கலாம் என தெரிவித்தது.

இருந்தபோதிலும் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், சிதம்பரம் சிறையிலிருந்து வெளிவரமாட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.