யெஸ் வங்கியின் நிதி நெருக்கடியை தொடர்ந்து, வங்கி வைப்புத்தொகை முதலீட்டாளர்களுக்கு ஒருவித கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் வங்கிகளிலிலுள்ள தங்களின் வைப்புதொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் வங்கி வைப்புத்தொகைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென்று இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை செயல் அலுவலர் சுனில் மேத்தா கூறினார். இது பற்றி அவர் கூறுகையில், “வங்கி வைப்புத்தொகைக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. பிரச்னை கட்டுக்குள் உள்ளது” என்றார்.
இதே போல் கோட்டக் மஹிந்திரா வங்கி, கர்நாடக வங்கி, ஆர்.பி.எல் வங்கி மற்றும் கருர் வைஸ்யா வங்கி உள்ளிட்டவை பொதுமக்களின் வைப்புத்தொகை பத்திரமாக இருக்கிறது என்று உறுதியளித்துள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும். இதேபோல் சில கூட்டுறவு வங்கிகளும் கடன் கொடுத்து நெருக்கடியில் சிக்கியுள்ளன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 2.57 சதவிகிதம் குறைந்த சில்லறை பணவீக்கம்!