சூரியன் செங்குத்தாக வரும்போது ஓர் இடத்திலுள்ள ஒரு பொருளுடைய நிழலின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. இந்த நாளையே ’நிழல் விழாத நாள்’ என்கிறோம்.
மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வைக் காண முடியும்.
இதன்படி புதுச்சேரியில் இன்று பகல் 12:14 மணியிலிருந்து 12.17 வரை இந்த நிகழ்வு ஏற்பட்டது. இந்த அரிய நிகழ்வினை புதுச்சேரி மாணவர்கள் கண்டு ரசிக்கும்படி புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அறிவியல் இயக்கம் இணைந்து 20 இடங்களில் பார்க்க செய்முறை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில், புதுச்சேரி அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு செய்முறை நிகழ்ச்சிகளை செய்து பார்த்து ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.