ETV Bharat / bharat

கோவிட்-19 தாக்கம் அதிகரிப்பு: டெல்லியில் ஊரடங்கு தொடரும் - கெஜ்ரிவால் அறிவிப்பு!

author img

By

Published : Apr 19, 2020, 4:49 PM IST

டெல்லி : கரோனா வைரஸ் பரவல் தடுப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் நிச்சயம் தளர்வு இருக்காது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

No lockdown relaxation in Delhi from Monday: Kejriwal
கோவிட்-19 தாக்கம் அதிகரிப்பு: டெல்லியில் ஊரடங்கு தொடரும் - கெஜ்ரிவால் அறிவிப்பு!

உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக டெல்லி மாநிலத்தில் 1,893 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 43 பேர் உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

தொற்றுநோய் பரவலில் இரண்டாம் கட்ட ஆபத்து நிலையை அடைந்திருக்கும் டெல்லியில் 11 மண்டலங்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் சிவப்பு குறியீட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு வேகமாக முன்னெடுத்துவருகிறது.

இந்நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தடுப்பது குறித்து அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் இன்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ”டெல்லியில் உள்ள பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப்போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூடியே இருக்க வேண்டும் என்ற அரசின் ஊரடங்கு உத்தரவில் மாற்றமில்லை. டெல்லியில் நிலவும் நிலைமையை மதிப்பிட்ட பிறகு, ஊரடங்கில் எந்தவிதமான தளர்வையும் அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். எனவே, ஊரடங்கு தொடரும்.

ஒரு வாரத்திற்குப் பிறகு ஊரடங்கு மீதான நிலைப்பாடு மதிப்பாய்வு செய்யப்படும். மேலும், முன்னேற்றம் இருந்தால் அதில் தளர்வு வழங்கப்படும்.

அரசின் உத்தரவுகளை மக்கள் பின்பற்றும் இடங்களில், பாதிப்பு அதிகரிக்கவில்லை. மக்கள் அவற்றைப் பின்பற்றாததால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இருப்பினும், நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது. நாம் அனைவரும் அரசின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும்”, என அவர் வலிறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : 'நான்தான் கோவிட்-19 பேய் வந்திருக்கேன்’ - அலறவிடும் விழிப்புணர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.