ETV Bharat / bharat

விமானத்தில் வந்த சதானந்த கவுடாவுக்கு தனிமைப்படுத்தலில் விலக்கு

author img

By

Published : May 25, 2020, 6:32 PM IST

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா இன்று டில்லியில் இருந்து பெங்களூரு வந்தடைந்த நிலையில், கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சதானந்த கவுடா
சதானந்த கவுடா

உள்நாட்டு விமானசேவைகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டதை அடுத்து மத்திய அமைச்சர் டி.வி. சதானந்த கவுடா இன்று டெல்லியில் இருந்து பெங்களூரு வந்தடைந்தார்.

இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகா வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது தன் பதவி, பொறுப்பு ஆகியவற்றின் காரணமாக மட்டுமே தனக்கு சில விலக்குகள் உள்ளன என்று தெரிவித்த அவர், தான் மருந்தகத் துறை அமைச்சர் என்பதால் தனக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

இன்று பெங்களூருவில் சுகாதாரத் துறை அமைச்சர், கர்நாடக துணை முதல்வருடன் நடைபெறும் சந்திப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிய அவர், ”நான் மாநில அரசுகளுடனும் அவற்றின் விநியோக சங்கிலி குறித்தும் தொடர்பு கொண்டு அறியாவிட்டால், எவ்வாறு வேலை நடக்கும்?” என்று பதில் கேள்வி ஒன்றையும் எழுப்பினார்.

மேலும், தன் கைப்பேசியில் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள ஆரோக்யா சேது செயலி இருப்பதைக் குறிப்பிட்ட சதானந்த கவுடா, தான் டில்லியில் இருக்கும்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை மேற்கொண்டு வந்ததாகவும், தன் வீட்டில் பணிபுரியும் சமையல்காரர்களும்கூட தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவை உளவு பார்க்கவந்த பாகிஸ்தான் ’புறா’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.