சீனாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் இந்திய ராணுவத்தினர் பலர் காணாமல் போனதாக ஊடககங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் ஏதும் உண்மையில்லை என இந்திய ராணுவம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் யாரும் தொலைந்துபோகவில்லை எனவும் அனைத்து வீரர்களும் பத்திரமகவே உள்ளனர் என இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கால்வன் பகுதியில் இரு தரப்பு ராணுவமும் மோதிக்கொண்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்துள்ளனர். சீனா தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் பல காணாமல் போனதாகவும், அவர்களை சீன ராணுவம் பிடித்து வைத்துள்ளதாகவும் வதந்திகள் வலம் வந்தன. இந்த வதந்திகளுக்கு ராணுவம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதையும் படிங்க: குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக ரூ.50,000 கோடிக்கு புது திட்டம்