ETV Bharat / bharat

டெல்லி கலவர வழக்கு: இஸ்லாமியர்கள் குறி வைக்கப்படுகிறார்களா?

டெல்லி: டெல்லி கலவரம் தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது காவலர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாக எழுந்த குற்றச்சாட்டை டெல்லி போலீசார் மறுத்துள்ளளர்.

Delhi Police NGOs Hindus Muslims டெல்லி டெல்லி கலவரம் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டம்
குடியுரிமை திருத்தச்சட்ட கலவர வழக்கு
author img

By

Published : Jun 7, 2020, 2:28 AM IST

பிப்ரவரி மாதம் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தின்போது, 53 பேர் கொல்லப்பட்டதோடு 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தக் கலவரம் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் வைத்த குற்றச்சாட்டை டெல்லி காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

அதிகாரபூர்வ தகவலின் படி, உள்ளூர் காவல்துறையினர் இந்துக்கள் 164, இஸ்லாமியர்கள் 142 பேரை கைது செய்துள்ளனர். மேலும், குற்றப்பிரிவினர் 41 இந்துக்கள், 63 இஸ்லாமியர்களை கைது செய்துள்ளனர்.

அவர்கள் அனைவர் மீதும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 5-ஆம் தேதிவரை, இச்சம்பவம் தொடர்பாக இரு சமூகத்தைச் சேர்ந்த 200 பேர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.