’டிக் டாக்’ செயலி மூலம் வெளியிடப்படும் வீடியோக்கள் ஆபாசமாகவும், சமூக பிரச்னைகளுக்கு காரணமாகவும் இருக்கின்றன எனவே அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என முத்துக்குமார் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ’டிக் டாக்’ செயலிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இதனையடுத்து ’டிக் டாக்’ நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்தபோது, ’டிக் டாக்’ செயலிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்து அடுத்த விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், ’டிக் டாக்’ நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.