இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் அஷ்வானி லொஹானி ( Ashwani Lohani) வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் பயணிகள் தங்களது விமானப் பயணத்தை ரத்து செய்தால், அபராதம் ஏதும் விதிக்கப்படாமல் முழு பணமும் திரும்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விமானம் புறப்படுவதற்கு ஏழு நாட்டுகளுக்கு (ஒரு வாரம்) முன்பாகவே முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே முழு பணமும் திரும்பி அளிக்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.