ETV Bharat / bharat

நித்யானந்தா ஆசிரமத்தில் பல அட்டூழியங்கள் - கனடா சிஷ்யை குற்றச்சாட்டு - brainwashed me says sarah stephanie landry

பெங்களூரு: நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ள சிறுவர், சிறுமிகள் துன்புறுத்தப்படுவதாக கனடாவைச் சேர்ந்த சிஷ்யை ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிஷ்யை
author img

By

Published : Sep 22, 2019, 5:01 PM IST

பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற இளம்பெண், தான் தங்கியிருந்தபோது, நித்யானந்தா ஆசிரமத்தில் நடந்த சம்பவங்கள் பற்றியும், நித்யானந்தா மக்களை ஏமாற்றி வருகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கனடாவைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற இளம்பெண் நித்யானந்தா ஆசிரமத்திற்கு வந்து துறவறம் பூண்டு ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற தனது பெயருடன் குருகுரு ஆச்சார்யவாக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் நித்யானந்தா ஒரு போலியான ஆள் என கூறி அவர் மீண்டும் தனது சொந்த நாட்டுக்கே திரும்பியுள்ளார்.

சாரா ஸ்டீபனி
சாரா ஸ்டீபனி

இந்நிலையில் தற்போது அவர் ஒரு வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நான் வெளியேறிவிட்டேன். அங்கு நடந்த சில விஷயங்கள்தான் என்னை ஆசிரமத்திலிருந்து வெளியில் வரத் தூண்டியது. நான் அங்கு தங்கியிருந்த அனைத்து நாள்களும் மிகச் சிறந்தது என நினைத்திருந்தேன். ஆனால் அவை அனைத்தும் பொய் என பிறகுதான் தெரிந்துகொண்டேன். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் நான் திருவனந்தபுரத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு ஒரு ரகசிய பணிக்காக அனுப்பப்பட்டேன். அந்த ஆசிரமத்தில் பல சிறுவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அவர்களுக்கு சந்திர மந்திரத்துடன் தங்களை இணைப்பது, மூன்றாவது கண்ணை திறப்பதற்கான பயிற்சி, ஒருவர் உடலில் இருக்கும் நோய்களைக் கண்டுபிடிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

நித்யானந்தா
நித்யானந்தா

நான் திருவனந்தபுரம் ஆசிரமத்தில் குருகுரு ஆச்சார்யாவாகச் சென்றிருந்தேன். அங்குள்ள குழந்தைகளுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் கணக்குகளை ஆரம்பித்து அதில் அவர்களைச் செயல்பட வைக்க வேண்டும் என்ற வேலை எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்காக தினமும் அந்த சிறுவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் என்னிடம் நெருங்கி பழகத் தொடங்கினர்.

ஒருநாள் இரவு நான் என் அறையில் இருக்கும்போது இரண்டு சிறுவர்கள் என்னை சந்திக்க வந்தனர். என்னை பார்த்ததும் அவர்கள் அழத் தொடங்கினர். அப்போது அவர்கள்தான் என்னிடம் நித்யானந்தா செய்வது அனைத்தும் பொய் என கூறினர். ஆசிரமத்தில் உள்ளவர்களால் நாங்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறோம். கழிவறைக்கு செல்லக்கூட எங்களுக்கு அனுமதியில்லை. நாங்கள் இரும்பு கம்பிகள் நிறைந்த அறையில் அடைக்கப்பட்டிருக்கிறோம் எனத் தெரிவித்தனர்.

அதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் இதைப் பற்றி நித்யானந்தா, ரஞ்சிதா, திருவனந்தபுரம் ஆசிரமத்தை நடத்துபவர் ஆகிய மூன்று பேரிடம் பேசினேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நானும் நித்யானந்தாவால் மூளை சலவை செய்யப்பட்டேன். மேலும் அவரின் உண்மையான முகம் தெரிந்த சில நாட்களிலேயே நான் அங்கிருந்து கிளம்பி கனடா வந்துவிட்டேன். அங்கிருக்கும் குழந்தைகளை காப்பாற்றவேண்டும்’ என பேசியுள்ளார்.

சாரா ஸ்டீபனி பேசும் வீடியோ

இரண்டு வருடங்கள் கழித்து சாரா குற்றம்சாட்டுவது என்பது மதத்தின் மீதான தாக்குதல். மேலும் நித்யானந்தாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் விதத்திலேயே இந்த குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறார் என நித்யானந்தா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.